
CCI-யின் முடிவு மீதான கூகுளின் மேல்முறையீட்டு இறுதி விசாரணையை தள்ளிவைத்தது NCLAT
செய்தி முன்னோட்டம்
தங்கள் மீது ரூ.936 கோடி அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) முடிவை எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT) வழக்கு தொடர்ந்திருந்தது கூகுள்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நாளை (நவம்பர் 28) நடைபெறவிருந்த நிலையில், அதனை தள்ளி வைப்பதாக கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது NCLAT.
ஆண்ட்ராய்டு செயலிகள் சந்தையில் தனக்கு இருக்கும் சந்தைப் பெரும்பான்மையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி கூகுளுக்கு அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்.
சந்தைப்போட்டி சமமின்மை தொடர்பாக கூகுளின் மற்றும் இந்திய போட்டிய ஆணையத்திற்கு இடையேயான இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள்
முதல் வழக்கில் அபராதத்தை செலுத்திய கூகுள்:
முன்னதாக நடைபெற்ற ஆண்ட்ராய்டு வழக்கில், இந்திய போட்டி ஆணையம் விதித்த ரூ.1,337.76 கோடி அபராதத்தையும் செலுத்தியிருக்கிறது கூகுள்.
இந்த இரண்டாவது வழக்கில் CCI-யின் முடிவின் மீது மேல்முறையீடு செய்த கூகுளுக்கு உடனடி நிவாரணம் வழங்க முடியாது என இந்த ஆண்டு ஜனவரி மாதம் மறுத்திருக்கிறது NCLAT.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. உடனடி தீர்வு வழங்க முடியாது என்ற NCLAT-ன் முடிவின் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கூகுள், பின்னர் அதனைத் திரும்பப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, தற்போது CCI முடிவின் மீதான கூகுளின் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.