பணியர்த்தல் பிரிவு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருக்கும் ஆல்ஃபபெட்
கடந்த ஜனவரி மாதம் முதலே தங்கள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்களின் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வந்தது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட். இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை உலகம் முழுவதும் தங்கள் நிறுவத்திலிருந்து 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது ஆல்ஃபபெட். இது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 6% ஆகும். அந்தப் பணிநீக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போது அந்நிறுவனத்தின் பணியமர்த்தல் பிரிவிலும் சிலநூறு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நடப்பு காலாண்டில், பெரு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆல்ஃபபெட்டே முதல் முறையாக பணிநீக்கத்தில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பணிநீக்க அளவு மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. இதுவே, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது பணிநீக்க அளவு நான்கு மடங்காகியிருப்பது குறிப்பிடத்தக்கது.