உங்கள் கூகுள் கிரோம், மெமரி பயன்பாட்டை ட்ராக் செய்கிறதா? எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கூகுள் கிரோம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயலில் உள்ள ஒவ்வொரு Tab-லும் எவ்வளவு மெமரி ஸ்பேஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க பயனர்களுக்கு உதவுகிறது. இந்த புதிய அம்சம் எந்தெந்த வலைப்பக்கங்கள் உங்கள் கணினியின் மெமரியை அதிகமாக உபயோகின்றது என்பதைக் கண்டறிவதற்கான ஒரு வழியை உருவாக்குகிறது மற்றும் உலாவியின் செயல்திறனை அதிகரிக்கவும், மந்தநிலைகள் அல்லது செயலிழப்புகளைத் தவிர்க்கவும் உதவும். இந்தப் புதுப்பிப்பு படிப்படியாக உலகெங்கிலும் உள்ள Chrome பயனர்களுக்கு வெளியிடப்படுகிறது என்றும் வரும் வாரங்களில் அனைவரையும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அம்சம் எவ்வாறு செயல்படுகிறது
உங்கள் பிரௌசர் டேப்-இன் நினைவகப் பயன்பாட்டைச் பார்க்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், குறிப்பிட்ட டேப் மேல் உங்கள் மவுஸ் கர்சரை வைக்க வேண்டும். ஒரு பாப்-அப் தோன்றும். அந்த குறிப்பிட்ட டேப், உங்கள் கணினியின் ரேம்(RAM) உபயோகத்தை மெகாபைட்டில் காட்டும். மேலும் இந்த Tab-ல், Chrome-இன் மெமரி சேவர் அம்சம் செயலில் உள்ளதா என்பதையும் பாப்-அப் வெளிப்படுத்தும். ஒரே நேரத்தில் பல டேப்களை நிர்வகிக்கும் போது, இந்த செயல்பாடு உதவிகரமாக இருக்கும். இந்த வசதியை அக்ட்டிவேட் அல்லது டிஆக்டிவேட் செய்ய, Setting->Performance-க்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். எனர்ஜி சேவர் பயன்முறையானது, பேட்டரி ஆயுளைச் சேமிப்பதற்காக பின்னணி செயல்பாடுகள் மற்றும் அனிமேஷன்கள், மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பிரேம் வீதங்கள் போன்ற காட்சி விளைவுகளைத் தடுக்கிறது.