விண்வெளி: செய்தி

07 Oct 2023

இஸ்ரோ

ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ

இந்திய கடற்படையின் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் க்ரூவ் எஸ்கேப் சிஸ்டத்தை(Crew Escape System) முதல் முறையாக இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது.

ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா

1990-ல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் விண்ணில் ஏவப்பட்டு இது வரை மனித குலத்திற்கு விண்வெளி குறித்த பல்வேறு ஆச்சர்யங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை ஹபுள் தொலைநோக்கியையே சேரும்.

வெள்ளி கோள் குறித்த நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் கட்டுரை

பூமிக்கு அடுத்திருக்கும், உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகக் கருதப்படும் வெள்ளி கிரகத்தின் (Venus) மீது ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் ஏற்படும் குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

30 Sep 2023

இஸ்ரோ

சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா-L1 திட்டங்களை திட்டங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ.

25 Sep 2023

நாசா

தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா

வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம்.

செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்!

நாம் வாழும் இந்தப் பேரண்டமானது ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதையும் விண்வெளி ஆய்வாளர்கள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.

புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும்  விஞ்ஞானிகள்!

பூமியைத் தவிர இவ்வண்டத்தின் பிற கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தே வருகிறார்கள். இவ்வகையான விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருக்கிறது நாசா.

ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ.

07 Sep 2023

ஜப்பான்

நிலவு ஆராய்ச்சிக்காக ஜப்பான் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலத்தை ஏவியுள்ளது

ஜப்பான், தனது முதல் வெற்றிகரமான மூன் லேண்டராக இருக்கும் என்று நம்பும் ராக்கெட்டை, வியாழன் (செப்டம்பர் 7) காலை விண்ணில் ஏவியது.

LRO ஆய்வுக்கலனைக் கொண்டு சந்திரயான் 3 லேண்டரைப் படம்பிடித்த நாசா

நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் தங்களுடைய Lunar Reconnaissance Orbiter Camera (LRO Camera) மூலமாக, சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரைப் படம்பிடித்திருக்கிறது நாசா. அந்தப் புகைப்படத்தைத் தற்போது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்.

05 Sep 2023

ஜப்பான்

செப்டம்பர் 7ல் தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது ஜப்பான்

கடந்த வாரமே தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்தத் தயாரானது ஜப்பான். ஆனால், மேசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனவும் ஜப்பான் அறிவிக்கவில்லை.

சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு

முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் தரையிறங்கியது இந்தியா. எனவே, சந்திரயான் 3 திட்டத்தைக் கௌரவிக்கும் விதமாக , இஸ்ரோவுடன் இணைந்து மாபெரும் வினாடி வினா போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது மைகவ்இந்தியா (MyGovIndia) தளம்.

05 Sep 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர்

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 ஆகிய இரண்டு விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதி இஸ்ரோ.

05 Sep 2023

இஸ்ரோ

ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தைக் கடந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.

துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3.

02 Sep 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1.

ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ

திட்டமிட்டபடியே ஆதித்யா L1 விண்கலத்தின் ஏவலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1..

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'

திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம்.

ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.

ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

01 Sep 2023

சூரியன்

ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சூரியனை நோக்கி தனது முதல் விண்வெளி பயணத்தை ஆதித்யா L1 மூலம் செயல்படுத்தவுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு

எப்போதுமே நாம் செய்ய முடியாத அல்லது நமக்குக் கிடைக்காத விஷயங்கள் மீது நமக்கு ஒரு தனி ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஆர்வங்களுள் ஒன்று தான் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது.

30 Aug 2023

இஸ்ரோ

ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா?

சந்திரயான் 3 வெற்றியடைந்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா L1 என்ற விண்கலத்தை செலுத்த தயாராகிவிட்டது, இஸ்ரோ.

25 Aug 2023

நாசா

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'க்ரூ-7' (Crew-7) திட்டமானது இன்று செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நாளை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக தள்ளி வைக்கப்பட்டது என்பது குறித்த காரணம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

25 Aug 2023

இஸ்ரோ

ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு? 

சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  

இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நாள். சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு?

இன்று மாலை நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 3. இந்தத் திட்டத்திற்கும், இதற்கு முன்னர் இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?

சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!

நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.

சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

கடந்த 40 நாட்களாக இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நாளை நிறைவேறவிருக்கிறது. ஆம், நிலவில் கால்பதிக்கவிருக்கிறது சந்திரயான் 3.

22 Aug 2023

ரஷ்யா

லூனா-25ன் தோல்வியைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யா விஞ்ஞானி

47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா செயல்படுத்திய நிலவுத் திட்டமான லூனா 25வானது நேற்று நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத கோளாறு காரணமாக நிலவில் மோதியது.

சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு!

நாளை மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்காக தயாராகி வருகிறது இந்தியா. இஸ்ரோவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3 நாளை, நிலவில் கால்பதிக்கவிருக்கிறது. மேலும், முதல் முறையாக நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தவிருக்கிறது இந்தியா.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ

கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரயான் 3-யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து பிரிந்தது லேண்டர் மாடியூல்.

20 Aug 2023

ரஷ்யா

தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டம்

ரஷ்யாவின் லூனா 25 விண்கலமானது நிலவில் மோதியதால், 47 ஆண்டுகளுக்குப் பின் அந்நாடு செயல்படுத்திய விண்வெளித் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது.

20 Aug 2023

ரஷ்யா

ரஷ்யாவின் லூனா 25யில் ஏற்பட்ட கோளாறு, திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்குமா?

சந்திரயான் 3யுடன் சேர்த்து, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் லூனா 25-ல் எதிர்பாராத கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos).

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 3யின் ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூலை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தனித்தனியே பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது இஸ்ரோ.

லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து லேண்டர் மாடியூலை பிரிக்கும் நடவடிக்கையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ.

சந்திரயான் 3: ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் மாடியூல்

நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது சந்திரயான்-3.