ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.
நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, 235 கிமீ x 19,500 கிமீ தூர சுற்று வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரத் தொடங்கியது ஆதித்யா L1. இந்நிலையில், அதன் முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் நடவடிக்கையை இன்று மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது 245 கிமீ x 22,459 கிமீ தூர சுற்று வட்டப்பாதையில், ஆதித்யா L1 பூமியைச் சுற்றிவரத் தொடங்கியிருப்பதாக எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.
இதனைத் தொடர்ந்து, ஆதித்யா L1ன் அடுத்த சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையானது செப்டம்பர் 5ம் தேதி, அதிகாலை 3 மணியளவில் மேற்கொள்ளப்படும் எனவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரோவின் எக்ஸ் பதிவு:
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 3, 2023
The satellite is healthy and operating nominally.
The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00… pic.twitter.com/sYxFzJF5Oq