NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?
    நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 22, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 40 நாட்களாக இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நாளை நிறைவேறவிருக்கிறது. ஆம், நிலவில் கால்பதிக்கவிருக்கிறது சந்திரயான் 3.

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டம் குறித்து அனைவரும் ஆர்வமாக இருக்கும் நிலையில், இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும் என்பது குறித்து விவரித்திருக்கிறார் விஞ்ஞானி ஒருவர்.

    சந்திரயான் 3-யின் மூலம் நிலவில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

    மென் தரையிறக்கம் என்றால் என்ன? சந்திரயான் 3, விக்ரம் லேண்டரின் இறுதி நிமிடங்கள் எப்படி இருக்கும், என்னவெல்லாம் நடக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

    இஸ்ரோ

    மென் தரையிறக்கம்: 

    பொதுவாக நிலவிலோ அல்லது பிற விண்வெளிப் பொருட்களிலோ இரண்டு விதமான தரையிறக்கங்கள் மேற்கொள்ளப்படும். ஒன்று மென் தரையிறக்கம் மற்றொன்று வன் தரையிறக்கம்.

    இதில் வன் தரையிக்கம் எனப்படுபவை, தெரிந்தே நிலவில் அல்லது பிற பொருட்களிலே நமது விண்கலத்தையோ அல்லது பிற ஆய்வுக் கலன்களையோ மோத வைப்பது.

    இதன் ஒரே நோக்கம், அந்த மோதலுக்குள் நமக்குத் தேவையான தகவல்களை திரட்டுவது தான். சந்திரயான் 1 திட்டத்தில் இந்த விதமான தரையிறக்கத்தை மேற்கொண்டிருக்கிறது இந்தியா. இப்படித் தான் நிலவில் தண்ணீரின் இருப்பையும் கண்டறிந்தது இஸ்ரோ.

    ஆனால், மென் தரையிறக்கம் என்பது, நமது கட்டுப்பாட்டுடன் ஒரு பட்டாம்பூச்சியைப் போல மிகவும் மென்மையான முறையில் சேதாரங்கள் இன்றி ஒரு விண்கலனையோ, ஆய்வுக்கலனையோ விண்வெளிப் பொருட்களில் தரையிறக்குவது.

    இஸ்ரோ

    தோல்வியடைந்த இஸ்ரோ: 

    இந்த மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்துவது மிகவும் சவலான செயல். ஏனெனில், சந்திரயான் 3யின் மொத்த மென் தரையிறக்க செயல்முறையும் தானாகவே இயங்குவது தான்.

    பூமியில் இருந்து தரையிறக்கத்தைக் கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கூட எதுவும் செய்ய முடியாது. இதனை 'அந்த திகிலான 15 நிமிடங்கள்' என வர்ணிக்கின்றனர் அவர்கள்.

    யோசித்துப் பாருங்கள், 6000கிமீ வேகத்தில் நிலவை வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரம் லேண்டரானது, வெறும் பதினைந்து நிமிடங்களில் சரியான முடிவுகளை எடுத்து, மேற்கூறியபடி ஒரு பட்டாம்பூச்சியைப் போல மென்மையாக நிலவின் தரையில் தரையிறங்க வேண்டும்.

    2019-ல் பல்வேறு தவறான முடிவுகளால் நிலவில் தரையிறக்கத்தைத் சாத்தியப்படுத்த முடியாமல் போனது. இந்த முறை அந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது இஸ்ரோ.

    சந்திரயான் 3

    இறுதி நிமிடங்கள் எப்படி இருக்கும்? 

    தரையிங்குவதற்கு 18 நிமிடங்களுக்கு முன்பு, தான் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து 745.5 கிமீ தொலைவில், 30 கிமீ உயரத்தில், நொடிக்கு 1.6 கிமீ வேகத்தில் நிலவை வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர்.

    அடுத்த 690 நொடுகளில், அதன் இன்ஜின்கள் செயல்பாட்டிற்கு வரும். பைக்கில் பிரேக்குகளை அழுத்துவதைப் போல, அந்த இன்ஜின்களின் செயல்பாடு விக்ரம் லேண்டரின் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி, நிலவை நோக்கி விழ வைக்கும்.

    அதன் பின்பு, நிலவின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு நிலவின் தரையை நோக்கி நொடிக்கு 60 மீட்டர்கள் என்ற வேகத்தில் கீழ்நோக்கிப் பயணிக்கும்.

    கீழ் நோக்கிய பயணத்தின் போதே, தரையிறங்குவதற்கு ஏதுவாக, 90 டிகிரி மேல் நோக்கி தன்னுடைய நிலையை விக்ரம் லேண்டர் சரிசெய்து கொள்ளும்.

    சந்திரயான் 3

    கடைசி அத்தியாயம்: 

    இந்தச் செயல்பாடுகளின் இறுதியில் தரையிறங்கும் இடத்தில் இருந்து, 32 கிமீ தூரத்தில், 7.5 கிமீ உயரத்தில் விக்ரம் லேண்டர் பயணம் செய்து கொண்டிருக்கும்.

    தரையிறங்கும் இடத்திற்கு 800 முதல் 1300 மீட்டர்கள் உயரத்திற்கு வந்ததும், இந்தப் பயணத்தின் இறுதி அத்தியாயம் தொடங்கும்.

    இந்த சமயத்தில் தான், லேண்டரின் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்து லேண்டர் தரையிறங்கும் இடத்தினை படம் பிடிக்கும், தகவல்களைச் சேகரிக்கும். 12 நொடிகளில் உயரம் 150மீட்டர்களாகக் குறையும்.

    தரையிறங்கும் இடத்தில் எந்தப் பிரச்சினையையும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் கண்டறியாத பட்சத்தில், அடுத்த 73 நொடிகளில் 150 மீட்டர் உயரத்திலிருந்து மெல்ல நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    சந்திரன்
    விண்வெளி
    இஸ்ரோ

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? பூமி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இஸ்ரோ
    வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவியல்
    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? இஸ்ரோ
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ

    இஸ்ரோ

    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்? விண்வெளி
    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! செயற்கைகோள்
    'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர் இந்தியா
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025