ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா?
சந்திரயான் 3 வெற்றியடைந்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா L1 என்ற விண்கலத்தை செலுத்த தயாராகிவிட்டது, இஸ்ரோ. இதற்கான ஆய்வு ஒத்திகை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக இஸ்ரோ அறிவித்தது. ஆதித்யா L1 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, வருகிற 2-ஆம் தேதி, பகல் 11.50 மணிக்கு, PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இரு தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த வரலாற்று நிகழ்வை காண, பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறது இஸ்ரோ. இந்த நிகழ்வை நேரில் பார்வையிட விரும்புகிறவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.