NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!
    தொழில்நுட்பம்

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 02, 2023 | 04:24 pm 1 நிமிட வாசிப்பு
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!
    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள்

    சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1. இன்றைய ஏவலைத் தொடர்ந்து, தற்போது பூமியைச் சுற்றிவரத் தொடங்கியிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம். 16 நாட்கள் பூமியைச் சுற்றி வந்து பின்னர், பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறி முதல் லெக்ராஞ்சு புள்ளியை அடையவிருக்கிறது ஆதித்யா L1. இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிரது. ஆம், உங்களுக்குத் தெரிந்தது தான். சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களுடன், இன்றைய ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநர்கள் அனைவருமே தமிழர்கள். அவர்களைப் பற்றிய சிறுதொகுப்பே இது.

    சந்திரயான் 1: மயில்சாமி அண்ணாதுரை 

    கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் கொத்தவாடி என்ற கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. தன்னுடைய கிராமத்திற்கு அருகேயிருக்கும் பள்ளியிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார் மயில்சாமி. கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர், கோயம்புத்தூர் PSG கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும், கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். 1982ல் இஸ்ரோவில் இணைந்த இவர், INSAT திட்டத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டது மட்டுமல்லாமல், நிலவில் தண்ணீரின் இருப்பைக் கண்டறிந்த இந்தியாவில் முதல் சந்திரயான் திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார். மேலும், இந்தியாவின் முதல் செவ்வாய்த் திட்டமான மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்திலும் முக்கியமான பதவியை வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வனிதா முத்தையா மற்றும் சுப்பையா அருணன்: 

    மயில்சாமி அண்ணாதுரையின் கீழ் பணிபுரிந்து, சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய வனிதா முத்தையாவும் ஒரு தமிழரே. சந்திரயான் 3யின் வெற்றியில் சந்திரயான் 2 திட்டத்திற்கும் அதிக பங்குண்டு. 90% வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சந்திரயான் 2 திட்டத்தினை வழிநடத்தியவர் வனிதா. மீடியாவால் 'ராக்கெட் பெண்மணி' என அழைக்கப்படும் இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சந்திரயான் 2 திட்டத்திற்கு முன்பாக மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்திலும் தன்னுடைய பங்களிப்பை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்திற்கான முதல் திட்டமான மார்ஸ் ஆர்பிட்டர் திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட சுப்பையா அருணனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. திருநெல்வேலியில் பிறந்த இவர் கோயம்புத்தூரில் தன்னுடைய பொறியியல் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

    சந்திரயான் 3: வீரமுத்துவேல் 

    சமீபத்திய திட்டமான சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநராகச் செயல்பட்டதன் மூலம், இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல். இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோவும், அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இயந்திரப் பொறியியல் பட்டமும் பெற்றிருக்கிறார். சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றபின் 1989-ல் இஸ்ரோவில் பணியில் இணைந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். 1989-ல் இருந்தே இஸ்ரோவில் பணியாற்றி வரும் முத்துவீரவேல், 2016-ல் விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கு மிகவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆதித்யா L1: நிகர் ஷாஜி 

    சூரியனை ஆய்வு செய்வதற்காக இன்று இஸ்ரோ செயல்படுத்திய இந்தியாவின் முதல் சூரியத் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தில் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, இஸ்ரோவின் தமிழக திட்ட இயக்குநர்கள் வரிசையில் புதிதாக இணைந்து மீண்டும் தமிழகத்தை அரியணையில் ஏற்றியிருக்கிறார் நிகர் ஷாஜி. தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் பிறந்த இவர், செங்கோட்டை அரசுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பையும், திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 1987ம் ஆண்டு இஸ்ரோவின் இணைந்த இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். ஆதித்யா L1 திட்டத்திற்கு திட்ட இயக்குநராகச் செயல்படுவதற்கு முன்பு இஸ்ரோவின் பல்வேறு விண்வெளித் திட்டங்களில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் நிகர் ஷாஜி.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இஸ்ரோ
    விண்வெளி
    அறிவியல்
    தமிழ்நாடு

    இஸ்ரோ

    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  சந்திரயான் 3
    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இந்தியா
    ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ ஆதித்யா L1
    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' ஆதித்யா L1

    விண்வெளி

    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? ஆதித்யா L1
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம் சூரியன்
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு அறிவியல்

    அறிவியல்

    நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3 சந்திரயான் 3
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ
    Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள் தொழில்நுட்பம்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் தொழில்நுட்பம்

    தமிழ்நாடு

    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்
    ப்ரீ-ஃபயர் கேம் விளையாடியதால் நேர்ந்த விபரீதம் : 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023