NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்
    ஆதித்யா L1 திட்டத்திலும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 02, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் பணியாற்றிய தமிழக திட்ட இயக்குநர்களான மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீர முத்துவேல் வரிசையில் ஆதித்யா L1 திட்டத்திற்கு திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டதன் மூலம் புதிதாக இணைந்திருக்கிறது நிகர் ஷாஜி.

    தென்காசியைச் சேர்ந்த இவர், செங்கோட்டை அரசுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 1987ல் இஸ்ரோவில் இணைந்திருக்கிறார்.

    ஆதித்யா L1

    தமிழக விஞ்ஞானிகளின் பங்கு:

    ஆதித்யா L1 திட்டத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படவிருக்கும் Visible Emission Line Coronagraph (VELC) என்ற கருவியை இந்தியாவின் IIA (Indian Institute of Astrophysics) கல்வி நிறுவனமே உருவாக்கியிருக்கிறது.

    இந்த VELC ஒவ்வொரு நாளும் சூரியனை ஆய்வு செய்து சேகரிக்கும் தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்கான தகவல் வழித்தட மென்பொருளை தமிழகத்தைச் சேர்ந்த முத்து பிரியாள் தலைமையிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.

    ஆதித்யா L1ன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் விஞ்ஞானிகளில் குழுவில் முத்து பிரியாளும் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் கரைக்குடிக்கு அருகேயுள்ள தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சூரியன்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரோ

    சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ சந்திரயான் 3
    நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3, ட்வீட் செய்த இஸ்ரோ சந்திரயான் 3
    சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ சந்திரயான் 3

    சூரியன்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! ஜப்பான்
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ
    ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம் விண்வெளி

    தமிழ்நாடு

    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025