Page Loader
ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 10, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ. முன்னதாக செப்டம்பர் 5ம் தேதி, ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மூன்றாவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது 296 கிமீ x 71,767 கிமீ தூர சுற்றுவட்டப்பாதையில் பூமியை வலம் வரத் தொடங்கியிருக்கிறது ஆதித்யா L1. இதனைத் தொடர்ந்து நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையானது, செப்டம்பர் 15 அன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.

ட்விட்டர் அஞ்சல்

இஸ்ரோவின் எக்ஸ் பதிவு: