NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு
    தொழில்நுட்பம்

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு

    எழுதியவர் Prasanna Venkatesh
    August 31, 2023 | 11:07 am 1 நிமிட வாசிப்பு
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்

    எப்போதுமே நாம் செய்ய முடியாத அல்லது நமக்குக் கிடைக்காத விஷயங்கள் மீது நமக்கு ஒரு தனி ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஆர்வங்களுள் ஒன்று தான் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது. பூமியுடன் ஒப்பிடும் போது செவ்வாய் கிரகத்தில் எந்தவிதமான வளமோ அல்லது உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளோ இருப்பது கண்டறியப்படவில்லை, எனினும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் ஒரு மனக்காட்சி நமக்கு வசீகரமானதாக இருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மனிதர்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா திட்டமிட்டு வரும் நிலையில், எத்தனை மனிதர்களை அனுப்பினால் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியும் என சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

    செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம்: 

    இந்த ஆய்வை ஒரு கணினி நிரலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். ABM (Agent Based Model), என்ற கணினி நிரலின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தக் கணினி நிரலானது மனிதர்களை குணங்களின் அடிப்படையில் நான்காகப் பிரித்திருக்கிறது. சாதுக்கள், சமூகத்தினர், எதிர்வினையாற்றுபவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள். இவர்களில் சாதுக்கள் என்பவர்கள், பெரும்பாலும் மற்றவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பவர்கள். சமூகத்தினர், ஒரு சமூகக் கட்டமைப்பில் இணைந்து செயல்படக்கூடியவர்களாக இருப்பவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த இரு குணாதியசயங்களைக் கொண்ட மனிதர்கள் 22 பேர் இருந்தாலே, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த முடியும் எனக் கணக்கிட்டிருக்கிறது ABM கணினி நிரல்.

    கணினி நிரலில் வரம்புகள்: 

    மேற்கூறிய நான்கு குணங்களில் கடைசி இரண்டு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்கள் என்றால், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த கூடுதல் மனிதர்கள் தேவைப்படுவார்கள் என்று கணக்கிட்டிருக்கிறது ABM கணினி நிரல். செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் என்பது பூமியில் மனிதன் கற்காலத்திற்கும் முன்னர் தொடங்கிய வாழ்க்கை முறையில் இருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக புதிய உலகைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தக் கணினி நிரலானது, ஏற்கனவே ஒரு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்புகள் செவ்வாயில் இருப்பதாக அனுமானித்துக் கொண்டது. மேலும், மனிதர்களுக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு குட்டி அனுக்கரு உலை அவர்களிடம் இருப்பதாகவும் அனுமானித்திருக்கிறது அந்தக் கணினி நிரல்.

    முடிவில் முரண்படும் ஆய்வாளர்கள்: 

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும் என்ற இந்த ஆய்வு முடிவை, பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரான்ஸைச் சேர்ந்த ஜீன் மார்க் சலோட்டி என்கிற விண்வெளி ஆய்வாளர் ஒருவர், மேற்கூறிய ஆய்வு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். இவர், முன்னதாக செவ்வாயில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழத்த குறைந்தபட்சம் 110 மனிதர்களாவது தேவைப்படும் என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 22 மனிதர்கள் குறைந்த காலத்திற்கு செவ்வாய் கிரகத்தில் உயிர்பிழைத்திருக்க முடியும். ஆனால், அங்கு செழிப்பான வாழ்க்கை முறையை உருவாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் சலோட்டி.

    ஏன் சாத்தியமில்லை?

    ஜீன் மார்க் சலோட்டி கூறியது போல, மேற்கூறிய கணினி நிரலானது, செவ்வாயில் குடியேறி 28 ஆண்டுகளுக்கு பிறகு 10 மனிதர்கள் உயிர்பிழைத்திருந்தாலே, அது வெற்றிகரமான குடியேற்றமாகக் கருதியிருக்கிறது. 2018-ம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் ஆய்வு முடிவில், சூரிய குடும்பத்திற்கு அருகேயிருக்கும் ப்ராக்ஸிமா சென்சுரி நட்சத்திரக் குடும்பத்திற்கு, ஒரு முறை பயணத்தின் போது (6300 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்), மரபணு ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான மக்கள் தொகையை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் 98 மனிதர்களாவது தேவை எனக் கண்டறிந்திருக்கின்றனர். செவ்வாய் கிரகத்திலும் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த அந்த அளவிற்காவது மனிதர்கள் தேவைப்படுவார்கள் எனக் கூறியிருக்கிறார் சலோட்டி.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விண்வெளி
    அறிவியல்
    பூமி

    விண்வெளி

    ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா? இஸ்ரோ
    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது நாசா
    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ
    வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 சந்திரயான் 3

    அறிவியல்

    நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3 சந்திரயான் 3
    Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள் தொழில்நுட்பம்
    உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள் தொழில்நுட்பம்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி மருத்துவம்

    பூமி

    உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை உலகம்
    ஜூலை 2023-ஐ வெப்பமான மாதமாக அறிவித்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் நாசா சுற்றுச்சூழல்
    சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023