லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ
நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து லேண்டர் மாடியூலை பிரிக்கும் நடவடிக்கையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, லேண்டர் மாடியூலின் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் 'டீபூஸ்டிக்' நடவடிக்கையை இன்று மேற்கொண்டது இஸ்ரோ. இந்த நடவடிக்கையின் பயனாகத் தற்போது, நிலவைச் சுற்றி 113 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியிருக்கிறது சந்திரயான்-3யின் லேண்டர் மாடியூல். இதனைத் தொடர்ந்து லேண்டர் மாடியூலின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தைக் மேலும் குறைக்கும் அடுத்த 'டீபூஸ்டிங்' வடவடிக்கையானது, வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு மேற்கொள்ளப்படவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ. மேலும், லேண்டர் மாடியூல் தனியாகப் பிரிந்த பின்பு அதன் LPDC மற்றும் L1 ஆகிய கேமாரங்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.