
உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்
செய்தி முன்னோட்டம்
இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நாள். சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.
அது வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென்பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சேரும்.
இந்த தருணத்தில், உங்களுக்கு மேலும் ஒரு சுவாரசிய தகவலை தரவுள்ளோம். நிலவில் முதன்முதலில் மனிதனை அனுப்பிய நாடு, அமெரிக்கா.
அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் மூன்று பேர் சென்ற அந்த குழுவில், முதலில் நிலவில் தரையிறங்கியது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அதன் பின்னர், இது வரை 6 விண்கலங்கள் மனித குழுவை நிலவிற்கு ஏற்றி சென்றுள்ளது.
card 2
50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்
நிலவை அடையும் விண்வெளி வீரர்களும், தங்கள் ஆராய்ச்சிக்காக, நிலவின் நிலப்பரப்பில் இருந்து மண்ணையும், பாறைகளையும் சேகரித்து சென்றுள்ளனர்.
தற்போது வெளியான ஒரு அதிர்ச்சி தகவல்படி, விண்வெளி வீரர்களின் கழிவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட டயபர்கள் அடங்கிய மூட்டைகள் நிலவின் வீசியெறியப்பட்டுள்ளன.
மனிதக்கழிவுகள் நிரம்பிய டயபர்கள் அடங்கிய 96 மூட்டைகள், தற்போது நிலவில் உள்ளது என கூறப்படுகிறது.
மாசற்ற நிலவில், இத்தகைய அநாகரீகமான செயல் எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.
நிலவில், காற்றோ, தூசியோ இல்லாத காரணத்தால், அந்த மனிதக்கழிவுகள் மக்கி இருக்குமா என்பதும் தற்போது சந்தேகமே!