இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர்
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 ஆகிய இரண்டு விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதி இஸ்ரோ. இஸ்ரோவின் இந்த வெற்றிகளை உலகிலுள்ள இந்திய மக்கள் அனைவருமே கோலாகலமாகக் கொண்டாடிய நிலையில், குருகிராமில் உள்ள மால் ஒன்றில் இஸ்ரோவின் வெற்றிகளைக் கொண்டாடும் விதமாகப் பள்ளி மாணவர்களின் நிகழ்த்திய பிளாஷ் மாப் ஒன்றின் காணொளியைப் பகிர்ந்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். 105 நொடிகள் நீளும் அந்தக் காணொளியில் பள்ளி மாணவர்கள் பிளாஷ் மாபைப் பார்த்து, பார்வையாளர்களும் கொண்டாடும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. பார்வையாளர்களும் இஸ்ரோவின் வெற்றி குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக அந்தக் காணொளியில் தெரிவித்திருக்கிறார்கள். காணொளியை பகிர்ந்து கொண்டதுடன், அந்தக் காணொளி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.