நிலவு ஆராய்ச்சிக்காக ஜப்பான் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலத்தை ஏவியுள்ளது
ஜப்பான், தனது முதல் வெற்றிகரமான மூன் லேண்டராக இருக்கும் என்று நம்பும் ராக்கெட்டை, வியாழன் (செப்டம்பர் 7) காலை விண்ணில் ஏவியது. "மூன் ஸ்னைப்பர்" லேண்டரை சுமந்து கொண்டு, H2-A ராக்கெட், இன்று காலை 8:42 மணிக்கு (2342 GMT புதன்) விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த லேண்டர், நான்கு முதல் ஆறு மாதங்களில் சந்திரனின் மேற்பரப்பைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான வானிலையால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த விண்கலம், தெற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமாவிலிருந்து ஏவப்பட்டது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா), நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி செயற்கைக்கோளையும் இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.