
செப்டம்பர் 7ல் தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது ஜப்பான்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரமே தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்தத் தயாரானது ஜப்பான். ஆனால், மேசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனவும் ஜப்பான் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது தங்களுடைய நிலவுத் திட்டத்தை செப்டம்பர் 7ம் தேதி செயல்படுத்தவிருப்பதாக எக்ஸில் பதிவிட்டிருக்கிறது ஜப்பான். இத்திட்டமானது நிலவில் தரையிறங்குவதற்கா ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் முயற்சியாகும்.
சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடுகள் பட்டியலில் நான்காவது இந்தியா இணைந்த நிலையில், இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஜப்பானும் அந்தப் பட்டியலில் இணையும்.
விண்வெளி
எதற்காக இந்தத் திட்டம்?
தங்களுடைய நிலவுத் திட்டத்திற்கு X-ray Imaging and Spectroscopy Mission (XRISM) என்ற பெயரைச் சேர்த்து XRISM/SLIM எனப் பெயரிட்டிருக்கிறது ஜப்பான்.
சந்திரயான் 3 திட்டத்தில், 1750 கிலே எடையுடைய லேண்டர் மாடியூலைப் பயன்படுத்தியது இந்தியா. ஆனால், ஜப்பானோ வெறும் 200 கிலோ எடையுடைய SLIM (Small Lander for Investigating Moon) லேண்டரைப் பயன்படுத்தவிருக்கிறது.
இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே, நிலவில் மென் தரையிறக்கத்தைச் சாத்தியப்படுத்துவது தான். அதேபோலவே, துல்லியமான மென்தரையிறக்கத்தைச் சாத்தியப்படுத்தும் நோக்கத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது ஜப்பான்.
இத்திட்டத்தின் கீழ் தாங்கள் அனுப்பும் SLIM லேண்டரை, நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள ஷியோலி என்ற பள்ளத்திற்கு அருகே தரையிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ஜப்பான்.
ஜப்பான்
என்ன செய்யவிருக்கிறது ஜப்பான்?
பொதுவாக நிலவுத் திட்டங்களில் தரையிறக்கத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யும் போது, தரையிறக்கத்திற்கு சுலபமாக இருக்கும் வகையில் பல கிலோமீட்டர்கள் பரப்பளவில் சமதளமாக இருக்கும் இடத்தையே தேர்வு செய்வார்கள்.
ஆனால், ஜப்பானோ மிகவும் குறுகிய பள்ளங்கள் நிறைந்த பகுதிக்கு இடையில் 100 மீட்டர் பரப்பளவை தரையிறக்கத்திற்காகத் தேர்வு செய்திருக்கிறது.
தரையிறங்குவதற்கு வசதியான இடத்தில் மட்டுமல்ல, நமக்கு தேவைப்படும் இடத்தில் விண்கலத்தை கச்சிதமாகத் தரையிறக்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டத் திட்டமிட்டிருக்கிறது ஜப்பான்.
மேலும், இந்தியா எடுத்துக்கொண்டதை விட மிக அதிகமாக நான்கு முதல் ஆறு மாத கால பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது ஜப்பானின் விண்கலம். வருங்காலத்தில் மிகக் குறைந்த செலவிலேயே நிலவுத் திட்டங்களைச் சாத்தியப்படுத்தலாம் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது அந்நாடு.
ட்விட்டர் அஞ்சல்
ஜப்பான் விண்வெளி அமைப்பின் எக்ஸ் பதிவு:
🚀 Witness the XRISM/@SLIM Lift-Off LIVE! 🛰️
— XRISM (@XRISM_jp) September 5, 2023
Join us on September 6, 2023, at 23:10 UTC (September 7, 8:10 JST) for the launch event.
Watch it here 👉 https://t.co/1gfaDNi20D
Don't miss this thrilling journey into space! 🌌#JAXA @JAXA_en pic.twitter.com/jfXYZMrXXZ