இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

04 Jan 2024

கொரோனா

வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம் 

முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்

ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி 

தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை

அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

04 Jan 2024

சென்னை

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள் 

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது.

03 Jan 2024

டெல்லி

'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகம் அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனையும் புறக்கணித்தார்.

03 Jan 2024

பஞ்சாப்

வீடியோ: பஞ்சாப் மாநிலத்தில் திடீரென்று மேம்பாலம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு  

பஞ்சாப்பின் லூதியானாவில் உள்ள கன்னா பகுதிக்கு அருகே இருக்கும் மேம்பாலத்தில் இன்று எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று டிவைடரில் மோதி கவிழ்ந்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

03 Jan 2024

சென்னை

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி 

திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

03 Jan 2024

இந்தியா

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 573 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

03 Jan 2024

தமிழகம்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு 

ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு அளித்ததார்.

03 Jan 2024

அதானி

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.

'கேப்டன் விஜயகாந்த் எனும் உற்ற நண்பன்': புதிய வலைப்பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி

டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

03 Jan 2024

டெல்லி

அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகத்தின் மற்றொரு சம்மனையும் புறக்கணித்தார்.

03 Jan 2024

அசாம்

அசாமின் டெர்கானில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 14 பேர் பலி, 27 பேர் காயம்

அசாமின் டெர்கானில் இன்று அதிகாலை 5 மணியளவில் 45 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரி மீது மோதியதால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:

02 Jan 2024

இந்தியா

இந்தியாவில் மேலும் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 573 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

தமிழகம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார்.

திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம் 

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்தார்.

02 Jan 2024

இந்தியா

மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி

திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

02 Jan 2024

இந்தியா

'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர்

"இந்தியாவை அடிபணிய வைப்பதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதே" பாகிஸ்தானின் முக்கியக் கொள்கை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் ஊரடங்கு: 4 பேர் சுட்டுக் கொலை

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:

01 Jan 2024

பீகார்

பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல் 

பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் தலித் பெண் ஒருவரை பொது மக்கள் மத்தியில் வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

01 Jan 2024

ஜப்பான்

சுனாமி எச்சரிக்கை: அவசர எண்களை அறிவித்தது ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்

ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

01 Jan 2024

இந்தியா

இந்தியாவில் மேலும் 636 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 636 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி

ஜார்க்கண்ட் ஜாம்ஷெட்பூரில் இன்று கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

01 Jan 2024

பீகார்

உண்மையிலேயே காணாமல் போன குளம்: பீகாரில் பரபரப்பு 

இதற்கு முன், ஒரு பாலம் மற்றும் ரயில் எஞ்சின்கள் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்திய அதே பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு குளம் காணாமல் போயிருக்கிறது.

01 Jan 2024

இந்தியா

அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து 

பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டர் மூலம் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களை ஏமாற்றும் வகையில் நடக்கும் QR குறியீடுகள் மோசடி குறித்து வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது

உத்திரபிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில், இரண்டு மாதத்திற்கு முன்னர் மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

31 Dec 2023

பீகார்

க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: நவாடா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர்.

31 Dec 2023

அமித்ஷா

பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை

பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

31 Dec 2023

சென்னை

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு

சென்னையில் உள்ள குடிநீர் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத உடல் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.