திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி
செய்தி முன்னோட்டம்
திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கு.க.செல்வம் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயூர் லான்முட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதற்கு பிறகு, முன்பு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின், மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் எனஅவர் எதிர்பார்த்தார்.
ஆனால், அந்த பதவி கிடைக்காததால் அவர் பாஜகவில் இணைந்தார்.
அதன் பின், 2021ஆம் ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் அவர் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கு.க.செல்வத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ட்ஜ்கவ்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அது போக, திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
"வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம், மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று நினைக்கும் போது நெஞ்சம் வலிக்கிறது." என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.