ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்
செய்தி முன்னோட்டம்
ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
எக்ஸ்-இல் பகிரப்பட்ட வீடியோக்களில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஷர்மிளாவிடம் நிருபர்கள்,காங்கிரஸில் சேருகிறீர்களா என்று கேட்டபோது, அவர் அதை ஆமோதித்தார்.
முன்னதாக ஐதராபாத்தில் செவ்வாயன்று தனது கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, ஷர்மிளா, மற்றும் கட்சியின் தலைவர்களும், AICC தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்து, டெல்லியில் "முக்கியமான" ஒரு அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்
#அரசியல்Post | காங்கிரஸில் இணைந்தார் ஒய்.எஸ். சர்மிளா!#SunNews | #YSSharmila | @INCIndia pic.twitter.com/7bYjZSYV4G
— Sun News (@sunnewstamil) January 4, 2024
card 2
தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஷர்மிளா
ஷர்மிளா, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஆவார்.
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக ஷர்மிளா அறிவித்தார்.
இந்த சூழலில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
அதோடு அவர், தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா காங்கிரஸை காங்கிரஸுடன் இணைப்பதாகவும் அறிவித்தார். மேலும் தனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.