Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2024
05:48 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு: ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ட்ஜ்வ்க்க்

ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5

தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி ஜனவரி 6 முதல் ஜனவரி 8 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.