செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனு அளித்ததார்.
அந்த மனுவை இன்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, இது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மனு 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அவருக்கு எதிரான 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும், 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடங்கிய ட்ரங்கு பெட்டியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கலானது. இதனிடையே அவர் நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சக்ஜயூல்
உடல் நிலை காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இதற்கிடையில், அவர் மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் உடல்நிலையினை மருந்துகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்று கூறி இருந்தது.
மேலும் அறிக்கையில் உள்ள மருத்துவம் சார்ந்த காரணங்கள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மூன்றாவது முறையாக மனு அளித்ததார்.