சுனாமி எச்சரிக்கை: அவசர எண்களை அறிவித்தது ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்
ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 4:10 மணியளவில் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியைத் தாக்கிய நிலநடுக்கம், அப்பகுதியில் சுனாமியை தூண்டியுள்ளது. இதனை அடுத்து, ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் இந்தியத் தூதரகம், அவசர எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை வெளியிட்டுள்ளது. நிவாரணம் மற்றும் அவசர உதவிக்கு ஜப்பானில் உள்ள இந்தியர்கள் கீழுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அவசரகாலத் தொடர்பு விவரங்கள்:
+81-80-3930-1715 (யாகூப் டோப்னோ) +81-70-1492-0049 (அஜய் சேத்தி) +81-80-3214-4734 (டிஎன் பார்ன்வால்) +81-80-6229-5382 (எஸ் பட்டாச்சார்யா) +81-80-3214-4722 (விவேக் ரதீ) மின்னஞ்சல்கள்- sscons.tokyo@mea.gov.in , offfseco.tokyo@mea.gov.in, உள்ளூர் நேரப்படி மாலை 4:10 மணியளவில் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியைத் தாக்கிய நிலநடுக்கம், அப்பகுதியில் சுனாமியை தூண்டியுள்ளது. அதனால், கடலோர மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.