Page Loader
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள குடிநீர் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத உடல் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் கிடந்த அந்த சடலத்தை முதலில் மீனவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சென்னை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தேடுதல் நடத்தியதில், அந்த உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு கால் மட்டும் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சடலம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபருடையதாக இருக்கலாம் என்றும், அவரது உடலில் கத்தி குத்து காயம் இருந்ததது என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சன்ஜயூம்ஸ்

உடல் பாகங்களை கண்டுபிடிக்க நடந்துவரும் தேடுதல் வேட்டை 

உடலை மறைப்பதற்காக குற்றவாளி வேண்டுமென்றே பாறையில் அந்த உடலை கட்டி ஏரியில் வீசி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சடலம் 6 பாகங்களாக வெட்டி ஏரியில் வீசப்பட்டியிருந்தாலும், அந்த சடலத்தின் ஒரே ஒரு கால் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. தலையும், மற்றொரு காலும், இரண்டு கைகளும் இன்னும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் கிடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இன்று 2வது நாளாக தீயணைப்பு துறையினர் அந்த உடல் பாகங்களை வலை வீசி தேடி வருகின்றனர். காவல்துறையினர், உயிரிழந்தவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க, காணாமல் போன இளைஞர்களின் பட்டியலை ஆராய்ந்து வருகின்றனர்.