Page Loader
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jan 01, 2024
12:00 pm

செய்தி முன்னோட்டம்

ஜார்க்கண்ட் ஜாம்ஷெட்பூரில் இன்று கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த போது காரில் ஆதித்யபூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் இருந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்த்த பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜாம்ஷெட்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். "ஐந்து இருக்கைகள் கொண்ட காரில் எட்டு பேர் பயணம் செய்தனர். அந்த கார் முதலில் சாலை பிரிப்பான் மற்றும் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்" என்று ஜாம்ஷெட்பூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஜார்கண்ட்: விபத்தில் சிக்கி 6 பேர் பலி