Page Loader
உண்மையிலேயே காணாமல் போன குளம்: பீகாரில் பரபரப்பு 

உண்மையிலேயே காணாமல் போன குளம்: பீகாரில் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jan 01, 2024
09:53 am

செய்தி முன்னோட்டம்

இதற்கு முன், ஒரு பாலம் மற்றும் ரயில் எஞ்சின்கள் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்திய அதே பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு குளம் காணாமல் போயிருக்கிறது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இருந்த ஒரு குளம் மாயமாகி, அந்த குளம் இருந்த இடத்தில் ஒரு குடிசை கட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மணல் திருடும் கும்பல் நிலத்தை கையகப்படுத்துவதற்காக அந்த குளத்தை மண் கொண்டு நிரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த குளம் இருந்த இடத்தில் ஒரு குடிசை கட்டப்பட்டதும் அப்பகுதி மக்கள் இந்த விஷயம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

டவ்ஜ்க

 திருட்டுத்தனமாக நடந்த குளத்தை மணலால் நிரப்பும் பணி 

பொது மக்களுக்கு சொந்தமான அந்த குளம் மீன்பிடி மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக பராமரிக்கப்பட்டு வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தர்பங்கா மாவட்டத்தில் நிலத்தின் விலைவாசி உயர்ந்து வந்ததால், அந்த நீர்நிலையின் மீது கண் வைத்த ஒரு மணல் மாஃபியா கும்பல், அந்த குளத்தை மொத்தமாக திருடியுள்ளது என்று உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். குளத்தை மணலால் நிரப்பும் பணி துவங்கிய போது, ​​அதிகாரிகளிடம் அப்பகுதியினர் புகார் அளித்தனர். அதன் பின், மண்டல அதிகாரிகள் அங்கு நடந்த பணியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைத்தனர். எனினும், அதன் பிறகும், திருட்டுத்தனமாக குளத்தை மணலால் நிரப்பும் பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.