"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் நடந்த விழாவில், சரத்பவர் அணியில் உள்ள ஜிதேந்திர அவாத், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
"ராமர் பகுஜன்களாகிய எங்களுக்கு சொந்தமானவர். ராமர் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தார். அவர் ஒரு பகுஜன். அவர்கள் ராமரை மேற்கோள்காட்டி அனைவரையும் சைவர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
ஆனால், ராமர் சைவர் அல்ல, அவர் அசைவம் சாப்பிடுபவர். 14 ஆண்டுகள் காடுகளில் அவர் சைவ உணவிற்கு எங்கு செல்வார்?" என அவாத் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது
2nd card
அவாத் வீட்டின் முன் போராட்டம்
இந்த மாதத்தின் பிற்பகுதியில் நடக்க உள்ள அயோதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இவரின் இந்த கருத்து இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.
என்சிபியின் அஜித் பவார் அணி சார்பில் நேற்று இரவு, அவாத் வீட்டின் முன்பு பலர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இன்று காலை போராட்டக்காரர்கள் மீண்டும் அவரின் வீட்டின் முன்கூடி, அவாத் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாஜக எம்எல்ஏ தலைமையில் இப்போராட்டம் நடைபெறும் நிலையில், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பேரணியாக சென்று அவாத் மீது புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவாத் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.