Page Loader
இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jan 03, 2024
02:19 pm

செய்தி முன்னோட்டம்

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 573 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 4,440 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,15,136) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,371ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

தகவ்ல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,77,272 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று இந்தியாவில் 573 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 2 உயிரிழப்புகள் பதிவாகியது. நேற்று செயலில் இருந்த கொரோனாவின் எண்ணிக்கை 4,565 ஆகும். இதுவரை நாடு முழுவதும் JN.1 கொரோனா வகையின் 511 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. JN.1 கொரோனா வகையின் பாதிப்பு அதிகமாக கோவாவில் காணப்பட்டது. உலகளவில் இதுவரை பேர் 6,985,964 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 772,138,818 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,981,263 ஆக உயர்ந்துள்ளது.