
அசாமின் டெர்கானில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 14 பேர் பலி, 27 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
அசாமின் டெர்கானில் இன்று அதிகாலை 5 மணியளவில் 45 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரி மீது மோதியதால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.
அத்கெலியாவில் இருந்து பலிஜானுக்கு 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகாலை 3 மணியளவில் தங்கள் பயணத்தைத் தொடங்கியதாகவும், அவர்கள் தங்கள் இலக்கை அடையவிருந்தபோது, மார்கெரிட்டாவிலிருந்து வந்த நிலக்கரி லாரி ஒன்று, அந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜ்வ்க்
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த பயணிகளை மீட்டு, ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர்.
காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோலாகாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் தெரிவித்துள்ளார்.