க்ரைம் ஸ்டோரி: மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து கொலை செய்த 4 பேர் கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: நவாடா மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரது உடலை சிதைத்து, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. டிசம்பர் 26 அன்று ஒரு வயதான பெண்ணின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, நவாடா காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டியும் அவரது கணவரும் டிசம்பர் 25 ஆம் தேதி கயாவில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து அவர்களின் உறவினர்களைப் பார்க்க சென்றுள்ளனர்.
நான்கு குற்றவாளிகளும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்
வயதான தம்பதியினர், நவாடா ரயில் நிலையத்திலிருந்து இ-ரிக்ஷாவைப் பயன்படுத்தி தங்களது உறவினரின் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர். அப்போது அவர்களை பிக்-அப் செய்த ஆட்டோ டிரைவர், அந்த மூதாட்டியை மட்டும் ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் தப்பி ஓடினார். "குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்த நவாடா காவல்துறையினர் தங்களிடம் உள்ள அனைத்து வசதியையும் பயன்படுத்தி விசாரணையை தொடங்கினர். நாங்கள் சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக ஆய்வு செய்தோம். இது வழக்கில் திருப்புமுனைக்கு வழிவகுத்தது." என்று காவல்துறை SDPO நவாடா அஜய் பிரசாத் கூறியுள்ளார். விசாரணையின் போது இரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஆகியவை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்