Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள் 

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள் 

எழுதியவர் Sindhuja SM
Jan 03, 2024
05:39 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்குதெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதியில் நிலவுகிறது. மேற்கூறிய காரணங்களால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 3 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜனவரி 4 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, தேனி

சஜிகிஜிணி

ஜனவரி 5

தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி ஜனவரி 6 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜனவரி 7 தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஜனவரி 8 மற்றும் ஜனவரி 9 தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.