
பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் தலித் பெண் ஒருவரை பொது மக்கள் மத்தியில் வைத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீருடையில் இருக்கும் ராஜ் கிஷோர் சிங் என்ற காவல்துறை அதிகாரி, ஒரு பெண்ணை பொது இடத்தில வைத்து ஒரு குச்சியால் அடிப்பதை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ காட்டுகிறது.
அந்தப் பெண்ணும் மற்றொரு பெண்ணும் பொதுச் சண்டையில் ஈடுபட்டதால் அந்த பெண்ணை காவல்துறை அதிகாரி ராஜ் கிஷோர் சிங் அடித்ததாக பேசப்படுகிறது.
ஜட்வ்க்ள்
'குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்': சிதாமர்ஹி எஸ்பி
ஆனால், காவல்துறை அதிகாரிகள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
காவல்துறை அதிகாரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதாமர்ஹி எஸ்பி மனோஜ் குமார் திவாரி இந்தியா டுடே டிவியிடம் கூறியுள்ளார்.
எனினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை Newsbytesஆல் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா, பீகாரில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் போது, அப்பாவி பொது மக்கள் மீது "லத்தி சார்ஜ்" செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பட்டியலின பெண்ணை அடித்த பீகார் காவலர்
#Bihar | Dalit Woman Beaten By Cop In Public View; Police Clarify
— NDTV (@ndtv) January 1, 2024
Read Here: https://t.co/tc6SPEY9Ll pic.twitter.com/JznOQDcRYf