தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவக்கூடும். தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு:
ஜனவரி 1
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனி பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நெல்லை, குமரி
டிஜிஹ்ன்
ஜனவரி 2
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜனவரி 6 மற்றும் ஜனவரி 7
தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.