இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Dec 2023

இந்தியா

கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.

17 Dec 2023

கொரோனா

"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு

கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தமிழக வானிலை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் பின்வருமாறு:

17 Dec 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 335ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள் 

இன்று வாரணாசியில் நடந்த ரோட்ஷோவின் போது, ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தினார் பிரதமர் மோடி. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.

17 Dec 2023

பீகார்

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை எண்ணூர் பகுதியை, பைபர் படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆய்வு செய்தார்.

ரூ.6000 புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கும் புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.

லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர்

இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஜிஎஸ் பாட்டியா என்ற இந்திய மாணவர் கிழக்கு லண்டன் பகுதியில் இருந்து, கடந்த 15ஆம் தேதி முதல் மாயமானார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை(சிஆர்பிஎஃப்) துணை காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது

இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக ஜிது பட்வாரியை நியமித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

17 Dec 2023

குஜராத்

உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார்.

இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தமிழக வானிலை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் கீழ்வருமாறு:

16 Dec 2023

டெல்லி

எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்

சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு 

பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.

16 Dec 2023

இந்தியா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 339ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்

கடந்த மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், இந்த மாத தொடக்கத்தில் வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழை பொழிவை வழங்கியது.

16 Dec 2023

கோவிட் 19

அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு 

கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி 

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

16 Dec 2023

யுஜிசி

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

யுஜிசி தன்னால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பட்டங்களை வழங்கும் எட்டெக்(EdTech) நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளை எச்சரித்துள்ளது.

16 Dec 2023

இந்தியா

கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை

அரபிக்கடலில் சோமாலியா கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தபடுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்ததை அடுத்து, அங்கு நிலவும் சூழ்நிலையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

16 Dec 2023

பாஜக

நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

16 Dec 2023

கேரளா

கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 

கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கு - 13வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார்.

15 Dec 2023

சேலம்

மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம் 

சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே பயணிகள் ரயில் ஒன்று பணிமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக பதிவுத்துறை நேற்று மட்டும் ரூ.192 கோடி வசூல் செய்து சாதனை 

பொதுவாகவே, சுபமுகூர்த்த நாட்களில், பதிவுத்துறை அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும்.

15 Dec 2023

சென்னை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழை 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்திற்கு டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

புதுச்சேரி-காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.