Page Loader
எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 
எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 

எழுதியவர் Nivetha P
Dec 15, 2023
08:06 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையின் அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதன் ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரியான சம்பத் குமார் உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தது.

வழக்கு 

மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம்

இதனைத்தொடர்ந்து ஐ.பி.எஸ்.அதிகாரியான சம்பத்குமார் இதற்கு எதிராக பதில்மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதற்கு , உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அந்த பதில் மனுவில் இடம் பெற்றுள்ளதாகக்கூறி எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதிப்பெற்ற பிறகே இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தோனி அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கினை இன்று(டிச.,15)விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்திருப்பதாகக்கூறி அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். அதேசமயம், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.