NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை
    'எம்வி ருயன்' கப்பலில் 18 பேர் கொண்ட பணியாளர்கள் குழு பணிபுரிந்து வந்தது.

    கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    அரபிக்கடலில் சோமாலியா கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தபடுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்ததை அடுத்து, அங்கு நிலவும் சூழ்நிலையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    மேலும், இதனையடுத்து, கடற்கொள்ளையர் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    அரபிக்கடலில் சிக்கியுள்ள மால்டா கப்பலான 'எம்வி ருயன்' என்ற சரக்கு கேரியர், டிசம்பர் 14ஆம் தேதி மாலை UKMTO போர்ட்டல் மூலமாக இந்திய கடற்படைக்கு ஒரு அவசர பேரிடர் செய்தியை அனுப்பியது.

    டவ்கில்ஜி

    2017ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் பெரிய கடற்கொள்ளை சம்பவம் 

    அந்த செய்தியின் படி, 'எம்வி ருயன்' கப்பலில் 18 பேர் கொண்ட பணியாளர்கள் குழு பணிபுரிந்து வந்தது.

    ஆனால், திடீரென்று 6 அடையாளம் தெரியாத நபர்கள் அந்த கப்பலில் ஏறியதை அடுத்து, 'எம்வி ருயன்' பணியாளர்கள் இந்திய கடற்படைக்கு அவசர செய்தியை அனுப்பினர்.

    அந்த செய்தியை பெற்ற இந்திய கடற்படை, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பலை உடனடியாக திருப்பி விட்டு, 'எம்வி ருயன்' கப்பலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

    ஆனால், 'எம்வி ருயன்' கப்பலின் கட்டுப்பாட்டை கப்பல் பணியாளர்கள் ஏற்கனவே இழந்துவிட்டதாக இங்கிலாந்தின் கடல் வர்த்தக நடவடிக்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சோமாலிய கடற்கொள்ளையர்கள் நடத்தும் பெரிய தாக்குதல் இதுவாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்கரை
    கடற்படை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு மத்திய அரசு
    'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்  சட்டம் பேசுவோம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025