
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழை
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று(டிச.,15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மழை
அச்சத்தில் சென்னை மக்கள்
அதே போல், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி தற்போது சென்னை அடையாறு, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, புரசைவாக்கம், எம்.ஆர்.சி.நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்து சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வானிலை அறிக்கை
#BREAKING | 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்#Rain | #TNRains | #WeatherUpdate pic.twitter.com/p73SNlVWR9
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 15, 2023