தமிழக பதிவுத்துறை நேற்று மட்டும் ரூ.192 கோடி வசூல் செய்து சாதனை
பொதுவாகவே, சுபமுகூர்த்த நாட்களில், பதிவுத்துறை அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும். திருமணபதிவு, பத்திரப்பதிவு என பலவற்றிற்காக மக்கள் அந்நாளில் அதிகமாக வருவார்கள். அதனால், இது போன்ற நாட்களில், மக்களின் வசதிக்காக அதிக டோக்கன்களும் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று (14.12.23) சுபமுகூர்த்த தினம் என்பதாலும், இந்த கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும், அதிக பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் என இரு மடங்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக பதிவுத்துறை ஒரே நாளில் ரூ.192கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பதிவுத்துறை நேற்று மட்டும் ரூ.192 கோடி வசூல்
#NEWSUPDATE || ஆவணப்பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய்: பதிவுத்துறை | #TNGovt | #RegistrationDepartment | #Income | #PolimerNews pic.twitter.com/SyW6JmxBy3— Polimer News (@polimernews) December 15, 2023