ரூ.6000 புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கும் புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியை சேர்ந்த குடும்பத் தலைவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்.
மேலும், நிவாரணத் தொகை வழங்கும் போது, முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் கைகுழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
ஓரிரு நாட்களுக்கு முன், புயல் நிவாரண தொகை வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு, ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
டிவ்க்
வெள்ளத்தால் சிரமப்பட்ட 4 மாவட்ட மக்கள்
டோக்கனை இதுவரை பெறாதவர்கள் எப்படி நிவாரண தொகையைப் பெறலாம் என்பது இந்த இணைப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் சேதமடைந்தது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அந்த 4 மாவட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணைகடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 14ஆம் தேதி பிற்பகல் முதல் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வெள்ள நிவாரண தொகைத் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.