4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக வானிலை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் பின்வருமாறு: டிசம்பர் 17 தென் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்-- தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
டிசம்பர் 18
தென் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் டிசம்பர் 19 தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.