Page Loader
சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம் 
சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம் 

எழுதியவர் Nivetha P
Dec 15, 2023
08:01 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே பயணிகள் ரயில் ஒன்று பணிமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தினை விட்டு கீழே இறங்கியதில் பலத்த சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை கேட்டு உடனே பைலட் ரயிலை நிறுத்திவிட்டு, விபத்து குறித்த தகவலை தெரிவித்துள்ளார். பணிமனை சென்று கொண்டிருந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. அதனால் உயிர் சேதம் ஏதும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை. சென்னையில் இதுபோன்ற விபத்து இதோடு 3வது முறை என்று தெரிகிறது. முதலாவதாக செங்கல்பட்டில் ரயில் ஒன்று அண்மையில் தடம் புரண்ட நிலையில், அடுத்த விபத்து திரிசூலம் வழித்தடத்தில் நிகழ்ந்தது.

விபத்து 

விபத்திற்கான காரணம் என கண்டறிய ஆய்வு 

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் இதற்கான காரணம் என்ன? மழைக்காலம் என்பதால் தண்டவாளத்தின் ஈரத்தன்மையால் இதுபோன்று நடக்கிறதா? என்று கண்டறிய ரயில்வே பாதுகாப்பு மேலாளர் தலைமையிலான குழு ஒன்று சம்பவயிடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் இயக்கப்படுவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

ரயில் விபத்து