Page Loader
நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்

நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்

எழுதியவர் Srinath r
Dec 17, 2023
12:59 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலை 9 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்து நேர்ந்த போது நிறுவனத்திற்குள், 12 நபர்கள் இருந்ததாகவும், காவல்துறையினர் கூறியுள்ளனர். வெடிபொருட்களை பேக்கிங் செய்யும் போது நிறுவனத்தின் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் வெடிப்பு ஏற்பட்டது, வெடி விபத்திற்கு காரணமாக கூறப்படும் நிலையில், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிறுவனம் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான வெடிபொருட்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

விபத்து நடந்த ஆலைக்கு வரும் ஆம்புலன்ஸ்