அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக வானிலை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கைகள் கீழ்வருமாறு: டிசம்பர் 16 தென் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்-- ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மதுரை, விருதுநகர்
டிசம்பர் 17
தென் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை நாகை பகுதிகளை ஒட்டிய வங்கக்கடலில் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை நாகை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.