'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
"பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் நாட்டின் குடிமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டமே பாதுகாப்பு மீறலுக்குக் காரணம்" என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
"பாதுகாப்பு மீறல் உண்மையாகவே நடந்திருக்கிறது. ஆனால், அது ஏன் நடந்தது? நாட்டின் முக்கியப் பிரச்சினை வேலையின்மை. மோடி ஜியின் கொள்கைகளால், இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை" என்று வயநாடு எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிஹ்ஹ்ஜ்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.
அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சனை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் மணிப்பூர் வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகளின் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த பாதுகாப்பு அத்துமீறலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், போலீசார் இந்த காரணங்களை முழுமையாக நம்பவில்லை. அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.