Page Loader
கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 
சம்பவம் நடந்ததை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டனர்.

கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Dec 16, 2023
09:16 am

செய்தி முன்னோட்டம்

கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜீத் (50) மற்றும் பயணிகள் தெஸ்லீமா (34) முஹ்சினா (32) மற்றும் அவர்களது குழந்தைகளான ரைஹா பாத்திமா (4), ரின்ஷா பாத்திமா (7) ஆகியோர் உயிரிழந்ததாக தெரிகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ ரிக்‌ஷா மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

 துலக்கின

பேருந்து ஓட்டுநர் கைது 

கொயிலாண்டி - மஞ்சேரி சாலையில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் காயமடைந்த மூவரில் இருவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் அடிபட்ட ஆட்டோ முற்றிலுமாக சேதமடைந்தது. சம்பவம் நடந்ததை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உடல்கள் மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து, இன்று, மோட்டார் வாகனத் துறையினருடன், போலீசார் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மாஞ்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.