
செந்தில் பாலாஜி வழக்கு - 13வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 12ம்.,தேதி அவருக்கு எதிரான 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும், 300க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடங்கிய ட்ரங்கு பெட்டியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கலானது.
இதனிடையே அவர் நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்றோடு(டிச.,15)அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்தவாரே காணொளி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை வரும் ஜனவரி.4ம்.,தேதிவரை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டார்.
இன்றோடு 13வது முறையாக இவரது நீதிமன்றக்காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
காவல் நீட்டிப்பு
#BREAKING || செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு
— Thanthi TV (@ThanthiTV) December 15, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4ம் தேதி வரை நீட்டிப்பு
புழல் சிறையில் இருந்து காணொலி மூலமாக ஆஜரான செந்தில் பாலாஜி
13வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு… pic.twitter.com/jWNhjwpDOO