அமெரிக்கா: செய்தி
பூட்டிய வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிய வீட்டிற்குள் சக்கர நாற்காலியிலிருந்து தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மகள் யக்னபிரபாவை (76), கதவை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
யூடியூப்பிற்கு போட்டியாக களமிறங்கிய இன்ஸ்டாகிராம்: இனி 90 நிமிட நீள வீடியோக்கள் 'Features' மூலம் வெளியிடலாம்
குறுகிய வடிவ வீடியோக்களான ரீல்ஸ் மூலமாக உலகளவில் வரவேற்பை பெற்ற இன்ஸ்டாகிராம் நிறுவனம், தற்போது யூடியூப்பிற்குப் போட்டியாக நீண்ட நேர வீடியோக்களை வெளியிடும் வகையில் Features என்ற புதியஅம்சத்தை சோதித்து வருகிறது.
'ஸ்டார் ட்ரெக்' புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் வால்டர் கோயினிக் காலமானார்
உலகப் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை தொடரான ஸ்டார் ட்ரெக் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த மூத்த அமெரிக்க நடிகர் வால்டர் கோயினிக், தனது 90-வது வயதில் காலமானார்.
இஸ்ரேல் தேர்தல் களம்: டிரம்ப் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக மீண்டும் போர் அச்சுறுத்தல் விடுத்த நெதன்யாஹு
இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளித்த பகிரங்க ஆதரவைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தீவிரப்படுத்தப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (Buyout) ஆஃபர் வழங்கிய Microsoft
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் தனது முதலீடுகளை பல நூறு பில்லியன் டாலர்களாக கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், செலவுகளை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவை சேர்ந்த சுமார் 60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
உலகப் போர் வந்தால் அமெரிக்காவின் மாற்றுத் திட்டம் என்ன? '90 நாட்கள்' தப்பிக்க பென்டகனின் வியூகம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தன்னிச்சையாக இயங்கும் வகையிலான அதிநவீனத் திட்டத்தை பென்டகன் தயாரித்து வருகிறது.
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: இரண்டு வேறுபட்ட உளவுத்துறை அறிக்கைகள் கைவசம் உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் அதிகாரிகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் தொடர்பாக தங்களிடம் இரு வேறுபட்ட உளவுத்துறை அறிக்கைகள் கைவசம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்து கத்தாரின் மத்தியஸ்தத்தை நிராகரித்த ஈரான்
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் தீவிர போர்ப் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் கத்தார் நாட்டை சேர்ந்த மத்தியஸ்தர்கள் தெஹ்ரானுக்கு சென்றுள்ள சூழலில், தங்களின் 7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை அரசு தந்திரமாகப் பயன்படுத்த முடியாது; அமெரிக்காவின் கருத்துக்கு பின் ஜெய்சங்கர் தடாலடி பதில்
பயங்கரவாதத்தை பிற நாடுகளுக்கு எதிரான ஒரு அரசு தந்திரமாக பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணுக்கரு இணைவு மூலம் பாதரசத்தை தங்கமாக மாற்றியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் அறிவிப்பு; CERN சாதனை முறியடிப்பு
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மாரத்தான் ஃபியூஷன் என்ற தொழில்நுட்ப நிறுவனம், அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதரசத்தை நிலையான தங்கமாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: போராடி வீழ்ந்தார் இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் 18 வயது இளம் வீராங்கனை அனஹத் சிங் 1-3 என்ற கணக்கில் மலேசியாவின் முன்னணி வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் போராடித் தோல்வியடைந்தார்.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே புதிய டீசர் வெளியீடு: ஏமாற்றத்தில் மார்வெல் ரசிகர்கள்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் புதிய பிரத்யேக டீசர், அமெரிக்காவின் பிரபல வேர்ல்ட் சீரிஸ் பேஸ்பால் போட்டியின் போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் படுத்தும் பாடு; கனடா மீதான இறக்குமதி வரிகளைக் குறைத்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே நிலவும் சூழலில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) நீக்கியுள்ளது.
'அமெரிக்கா - இஸ்ரேல் தாக்கினால் ஷாக் கொடுப்போம்': வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தங்களுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடுத்தால், வளைகுடா நாடுகள் முழுவதும் உள்ள எண்ணெய் ஆலைகள், தரைக்கடலடி தகவல் தொடர்பு கேபிள்கள், தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) வசதிகள் ஆகியவை குறிவைக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வங்கிகளை அச்சுறுத்தும் AI ஏஜென்டுகள்: வாடிக்கையாளர் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பச் சவால்கள்
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான மார்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி போன்ற நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகும் செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்டுகளால் கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை; $114-ஐத் தொட்ட பிரெண்ட் கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இந்தியாவில் ஆட்சி மாற்ற சதி புகாரில் சிக்கும் அமெரிக்கத் தொழிலதிபர்
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்த சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு சதி செய்யப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் மீது பாய்ந்திட தயாராகும் அமெரிக்கா-இஸ்ரேல்; அதிபர் ட்ரம்ப் எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன?
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான கூட்டுத் திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தயாரித்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்: டொனால்ட் டிரம்ப் மற்றும் மார்க்கோ ரூபியோ முக்கிய அறிவிப்பு
ஒரு வருடத்திற்கும் மேலான தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிரிடம் ஈரான் விதித்த நிபந்தனைகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 8 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிர் டெஹ்ரானில் உயர்மட்ட தூதரக மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெய் பகிர்வு குறித்து மார்க்கோ ரூபியோ முக்கிய பேச்சு
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் கொள்கையில் மாற்றமா? பரவும் தகவல்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ முற்றுப்புள்ளி
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதிலும் உளவுத் தகவல்களைப் பகிர்வதிலும் அமெரிக்கா தாமதம் செய்வதாகவும், தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த டிரம்பின் செல்வாக்கு; என்ன காரணம்?
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு நிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 31 சதவீதமாக சரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சல்மான் கானை தொடர்ந்து டைகர் ஷெராப்: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைத் தொட முடியாதது ஏன்?
மும்பை ஜூஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பின் காரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ இன்று மும்பை வருகை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியா வருகை தருகிறார்.
'விரைவில் முஸ்லிம் நகரமாகும் பாரிஸ்': பிரான்ஸ் கலவரம் குறித்து அதிபர் டிரம்ப் சாடல்
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் வாழ்க்கை செலவின உயர்வைக் கண்டித்து வெடித்துள்ள வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக பெருகும் இனவெறி மற்றும் வெறுப்புப் பிரசாரங்கள்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இணையவழியில் பரப்பப்படும் இனவெறித் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புப் பிரசாரங்கள் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு அதிவேகமாக அதிகரித்து வருவது அந்நாட்டு வாழ் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு இலவசம்; பறக்கும் கார் சாதனைக்கு பின் எலான் மஸ்க் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், டெஸ்லாவின் 'பறக்கும் கார்' அறிமுகத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரஷ்ய டீசல் ஒப்பந்தம்: டிரம்பின் நிர்வாகத்தில் எழும் முரண்பாடுகள் மற்றும் அமெரிக்க அரசியலில் வீசும் காரசார விவாதங்கள்
ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய டீசல் ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் இருவர் முரண்பாடான விளக்கங்களை அளித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா சம்மதித்தால் 6 நாளில் ஹார்முஸ் திறக்கப்படும்! ஈரானின் 7 அம்ச கோரிக்கை குறித்து அப்பாஸ் அராச்சி பேச்சு
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், சர்வதேசக் கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை 6 நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயார் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்துள்ளார்.
டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை! ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி அதிரடி
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே மற்றும் உயர் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
ஒரே இரவில் மாற்றுவது சாத்தியமில்லை! இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
ஏரியா 51 அருகே பயங்கரம்! வேற்றுக்கிரக உயிரினங்களுடன் மோதி அமெரிக்க ராணுவ வீரர் பலி?
அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 ராணுவ தளத்திற்கு அருகே, ஊர்வன வகையைச் சேர்ந்த வேற்றுக்கிரக உயிரினங்களுடன் (Reptilian beings) அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் முன்னாள் அமெரிக்க ராணுவ ஸ்னைப்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த இந்தியர் கைது
கடந்த 2024 அமெரிக்க அதிபர் பொதுத்தேர்தலில், தான் ஒரு அமெரிக்கக் குடிமகன் என்று போலி ஆவணங்கள் மூலம் தவறான உறுதிமொழி அளித்து சட்டவிரோதமாக வாக்களித்த இந்தியக் குடிமகன் ஒருவரை அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து; இந்தியாவிற்கு நிம்மதி
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த கடுமையான தடைகள் மற்றும் சுங்க வரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிக விலக்கு அளித்து அதிகாரப்பூர்வ நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
பதவியேற்ற 5 நாட்களிலேயே வெளியேற்றம்! வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கேட்டி ஜகாரியாவுக்கு டிரம்ப் அறிவுரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளராகப் பொறுப்பேற்ற கேட்டி ஜகாரியா, பதவியேற்ற வெறும் 5 நாட்களிலேயே அப்பொறுப்பில் இருந்து விலகி வெளியேறுகிறார்.
மார்கோ ரூபியோவின் மும்பை பயணம் குறித்து பிரதமரை சாடிய ராகுல் காந்தி
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவின் வரவிருக்கும் இந்தியப் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
பெட்ரோல் விலை 20.3% அதிரடி உயர்வு! அமெரிக்காவில் பணவீக்கம் எகிறியது! வட்டி விகிதத்தைக் குறைக்க ஃபெடரல் வங்கி பிடிவாதம்
அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது.
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம், பெண்ட் நகரில் அமைந்துள்ள 'சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளி' வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இறுதி செய்யப்பட்டது! பியூஷ் கோயல் தகவல்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டு, தற்போது சட்டப்பூர்வ வரைவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) தெரிவித்துள்ளார்.