Loading...
'அமெரிக்கா - இஸ்ரேல் தாக்கினால் ஷாக் கொடுப்போம்': வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது

'அமெரிக்கா - இஸ்ரேல் தாக்கினால் ஷாக் கொடுப்போம்': வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
06:16 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தங்களுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடுத்தால், வளைகுடா நாடுகள் முழுவதும் உள்ள எண்ணெய் ஆலைகள், தரைக்கடலடி தகவல் தொடர்பு கேபிள்கள், தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) வசதிகள் ஆகியவை குறிவைக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், இத்தகைய சூழலில் தங்களுக்கு "எந்தவிதமான சிவப்பு கோடுகளும் (Zero Red Lines) கிடையாது" எனத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்ப மற்றும் AI உள்கட்டமைப்புகள் போர் பிரகடனத்தின் போது அழிக்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ராணுவ நகர்வுகள்

ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் மற்றும் இராணுவ நகர்வுகள்

மோஹம்மது காலிபாப்பின் ஆலோசகரான மெஹ்தி மொஹம்மதி, அடுத்த மோதல் ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக மாறும் என்றும், போரின் புவியியல் எல்லைகள் எதிரிகள் எதிர்பார்ப்பதை விட மிகவும் விரிவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நான்கு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப் பயிற்சி மற்றும் ஈரானின் வான்வெளியில் மேற்கொள்ளப்படும் போர் விமானங்கள் பறக்கும் நடவடிக்கைகளுக்கு பதற்றத்தை உச்சம் அடைய வைத்துள்ளது.

மேலும், ஈரானுக்குள்ளேயே அராக் பகுதியில் உள்ள அலுமினிய ஆலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து நாசவேலை காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஈரானின் இந்த எச்சரிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT