அமெரிக்கா: செய்தி
ஆசிய போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாதனை: பெண்கள் பிரிவில் மட்டும் 11 தங்கம், 38 பதக்கங்கள்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தது.
சைபீரியா பிளேக் மரணத்தால் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை; ரஷ்யாவிற்குப் பறந்த எச்சரிக்கை
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 28 வயது பெண் ஆய்வாளர் தார்யா ஷிபிலோவா உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிலமையை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
'12.5 கோடி மக்கள் வாக்கு!': பிரேசில் தேர்தலை இந்தியாவின் தேர்தல் எனக் குழப்பிய டொனால்ட் டிரம்ப்
பிரேசில் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலை குறிப்பிடுவதற்கு பதிலாக, இந்திய அதிபர் தேர்தல் எனத் தவறாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சுயவிருப்பத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வல்லரசாகிறது! முனிச் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ஜெர்மனியில் நடைபெற்ற 62-வது முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது புதிய அரசியல் மறுபரிசீலனை கொள்கைகள் மூலம் சுயவிருப்பத்தின் பேரில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வல்லரசாக உருவெடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் கமாண்ட் வீரர்களுக்கு ஊதியக் குறைப்பு: டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் எதிர்ப்பு
அமெரிக்காவின் எதிரி நாடுகளின் கணினி அமைப்புகளை ஹேக் செய்யவும், நாட்டின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் சைபர் கமாண்ட் வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் ஆண்டுக்கு 12,000 டாலர் (மாதம் 1,000 டாலர்) வரை குறைப்பதற்கு பென்டகன் திட்டமிட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்காணிக்க புதிய படை! டிரம்ப் அமைத்த சூப்பர் இன்டலிஜென்ஸ் ஃபோர்ஸ்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.
'உண்மையான போரே ஆன்மீகம்தான்!' ராணுவ தலைமையகத்தில் புதிய மத விவகாரங்கள் அலுவலகத்தை உருவாக்கியது அமெரிக்கா
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் மத விவகாரங்கள் அலுவலகம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் Apple Pay அறிமுகம்; இனி OTP, PIN இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்
அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் தனது 'Apple Pay' சேவை சேவையை இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
AI நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' பாதுகாப்பு ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'Joint Commitment on Frontier Responsibilities-ல்' அவர்களை கையெழுத்திட வைத்துள்ளார்.
அமெரிக்காவில் AI இனி 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்று அழைக்கப்படுமாம்: டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்க அரசு அமைப்புகள் மற்றும் கூட்டாட்சித் துறைகளின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் 'செயற்கை நுண்ணறிவு' (AI) என்ற சொல்லுக்கு பதிலாக 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்ற சொல்லை பயன்படுத்த உத்தரவிடும் நிர்வாக ஆணை ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பென்டகன் தரவுகள் திருட்டு: 30 லட்சம் அமெரிக்க ராணுவத்தினர் விவரங்கள் இணையத்தில் கசிவு
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் முக்கிய தகவல் தரவுத்தளமான பாதுகாப்பு மனிதவள தகவல் மையத்தின் கணினி அமைப்பில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் முக்கிய தனிநபர் விவரங்களை திருடியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விசா பெறுவதில் இந்தியர்களுக்குச் சிக்கல்: காத்திருப்பு நேரம் உயர்வு மற்றும் புதிய கட்டணங்கள் அறிமுகம்
அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் இருமடங்கு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க FBI தேடும் பட்டியலில் கோல்டி பிரார்! இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதிகள் யார்?
பஞ்சாபை சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியான சதிந்தர்ஜித் சிங் என்ற கோல்டி பிராரை அமெரிக்காவின் FBI அமைப்பு தனது மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி காலமானார்; போட்டி முடிந்த சில மணி நேரங்களில் சோகம்
உலக மல்யுத்த அரங்கில் பெக் (PAC) என்ற மேடைப் பெயரால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பிரபல பிரிட்டிஷ் மல்யுத்த வீரரான பெஞ்சமின் சடர்லி (40), அமெரிக்காவின் சிகாகோவில் திடீரென உயிரிழந்தார்.
7 மாதப் போருக்கு முற்றுப்புள்ளி? மீண்டும் தொடங்கும் அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து வரும் தீவிரப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளும் மத்தியஸ்தர்கள் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துகளுக்கு அமெரிக்கா கொடுத்த தளர்வு: 100% வரியிலிருந்து விலக்கு பெற்ற குறிப்பிட்ட மருந்துகள் எவை?
அமெரிக்கா சில குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அதன் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு மருந்துகளுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் $15 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவின் எஸ்ஸார் குழுமம்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் தயாரிப்புத் துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான 'மெசாபி மெட்டாலிக்ஸ்' நிறுவனம் ஐயோவாவில் $15 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட எஃகு ஆலையை நிறுவவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விலை வெறும் $100 தான்! நிலநடுக்கத்தை நொடியில் கணித்து எச்சரிக்கும் கியூப்; 16 வயது மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த விவியன் ஹி என்ற 16 வயது பள்ளி மாணவி, நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கியூப் என்ற சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு உயரிய கௌரவம்! போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி டீனாக டாக்டர் கீதா சுவாமி நியமனம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற போஸ்டன் பல்கலைக்கழகத்தின் சோபானியன் & அவேடிசியன் மருத்துவப் பள்ளியின் புதிய டீனாக இந்திய-அமெரிக்க பெண் மருத்துவர் டாக்டர் கீதா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
FedEx Panda Express விமானத்தில் அட்லாண்டா பறந்த 2 சீன பாண்டாக்கள்! அமெரிக்கா - சீனா இடையே மலரும் புதிய நட்பு
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் 'பிங் பிங்' மற்றும் 'ஃபு ஷுவாங்' என்ற இரு ஜெயண்ட் பாண்டாக்கள் சீனாவிடமிருந்து அமெரிக்காவின் அட்லாண்டா உயிரியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
பிரிட்டன் RAF விமான தளம் அருகே வெடிகுண்டு தாக்குதல் சதி: ஈரானுக்கு தொடர்பா?
பிரிட்டனில் அமெரிக்காவின் அதிநவீன நீண்டதூர போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள RAF ஃபேர்ஃபோர்ட் விமானப்படை தளத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், ஈரானின் பின்னணி குறித்து பயங்கரவாத எதிர்ப்பு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா உடன் போருக்கும் தூதரக பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயார்: வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு
அமெரிக்காவுடனான போர் மீண்டும் தீவிரமடைந்தால் அதை எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக உள்ளது, அதேவேளையில் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அடைக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
'கடைசி மூச்சு வரை போராடுவோம்': பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத டிரம்ப்பிற்கு ஈரானிய அதிபர் பதிலடி
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் முன்வைத்த 7 நாட்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
சவுதி அரேபியா அணுகுண்டு தயாரிக்க திட்டமா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கையால் டிரம்பின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
சவுதி அரேபியா எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை இன்னும் முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தயாரித்துள்ள ரகசிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
கூகுள், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்கா! அமெரிக்க அரசு இணையதளங்களை ஊடுருவிய ஓபன்ஏஐ மாடல்கள்
அமெரிக்க அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்கள் அணுகியுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தார் டிரம்ப்! அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த இலக்கு கியூபாவா? 120 நாட்களில் சிறப்புப் படைகளைத் திரட்ட அமெரிக்கா திட்டம்; கரீபியன் பிராந்தியத்தில் பதற்றம்
கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் தனது அவசரகாலத் தயார்நிலையை அமைதியாக அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் தணியுமா? ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் விதித்த 7 நாட்கள் கெடு
அமெரிக்காவுடனான மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஈரான் 7 நாட்கள் கொண்ட புதிய நிபந்தனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவு
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமா? ஹார்முஸ் நீரிணை மற்றும் பொருளாதாரத் தடை நீக்கம் குறித்து நியூயார்க்கில் ரகசிய பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தீவிர இரகசிய ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
'மனிதக் கட்டுப்பாட்டில் AI இருக்க வேண்டும்': டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்த முக்கிய கோரிக்கை
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே உயர்மட்ட இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
அமெரிக்காவில் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி: புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்தார் மார்கோ ரூபியோ
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை கிடைக்கும் சட்டத்தை பயன்படுத்தி, வணிக நோக்கில் நடத்தப்படும் 'பிறப்பு சுற்றுலா' வலையமைப்புகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விசா கட்டுப்பாட்டு கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
டிரம்பிற்கு நீதிபதி குட்டு! சிஎன்என், பொலிடிகோ ஊடகங்களின் உரிமத்தை உடனடியாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட பிரபல செய்தி நிறுவனங்களான சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடகங்களுக்கு உடனடியாக மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க ஃபெடரல் மாவட்ட நீதிபதி திமோதி கெல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையத்திற்கே நேரில் சென்ற டிரம்ப்! 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்தடைந்த ஜி ஜின்பிங்கிற்கு ரெட் கார்பெட் வரவேற்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறை பயணமாக வாஷிங்டன் சென்றடைந்தார்.
'கடைசி மூச்சு வரை போராடுவோம்!' ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி முழங்கிய ஈரான் அதிபர்; அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தேவையில்லாமல் போரை திணித்துள்ளதாக கடும் குற்றம்சாட்டினார்.
ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி?
வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையா? ஐ.நா சபை கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில்(UNGA) இரு நாடுகளின் உயர் அதிகாரிகளிடையே 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஈரான் விமானங்களுக்கு சர்வதேச தடை: அமெரிக்காவின் கெடுவால் உலகம் முழுவதும் இயக்கம் முடங்கும் அபாயம்
ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் சேவைகளையும் உலகம் முழுவதும் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஊடகப் புறக்கணிப்பால் அமெரிக்காவில் அதிர்ச்சி; மைக் இல்லாமல் பேசிய டொனால்ட் டிரம்ப்
CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி அமைப்புகள் டிரம்பின் நிகழ்வுகளை புறக்கணித்துள்ளன.
அமெரிக்காவில் 'டிரம்ப் டிவி' தொடக்கம்: முன்னணி ஊடகங்களுக்குத் தடை விதித்த வெள்ளை மாளிகை
CNN, MS NOW மற்றும் பொலிட்டிகோ ஆகிய முன்னணி செய்தி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதித்த சில நாட்களிலேயே, அமெரிக்க அதிபர் மாளிகை 'டிரம்ப் டிவி' என்ற நேரலை வீடியோ தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.