Loading...
டிரம்பிற்கு நீதிபதி குட்டு! சிஎன்என், பொலிடிகோ ஊடகங்களின் உரிமத்தை உடனடியாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
சிஎன்என், பொலிடிகோ ஊடகங்களின் உரிமத்தை உடனடியாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

டிரம்பிற்கு நீதிபதி குட்டு! சிஎன்என், பொலிடிகோ ஊடகங்களின் உரிமத்தை உடனடியாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 24, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட பிரபல செய்தி நிறுவனங்களான சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடகங்களுக்கு உடனடியாக மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க ஃபெடரல் மாவட்ட நீதிபதி திமோதி கெல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த ஊடகத் தடை உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளை மீறும் வகையில் உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

வழக்கின் பின்னணி

அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் திருத்தம் மற்றும் வழக்கின் பின்னணி

தங்களுக்கு எதிராக பொய் செய்திகளைப் பரப்புவதாக குற்றம்சாட்டி, இந்த மூன்று ஊடகங்களின் நிருபர்களின் வெள்ளை மாளிகை அடையாள அட்டைகளை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து அந்த ஊடகங்கள் தொடுத்த வழக்கில், தங்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், முன் அறிவிப்பின்றி தன்னிச்சையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு ஊடகத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கு முன்பாக அவற்றுக்கு விளக்கம் அளிக்கப் போதிய வாய்ப்பும், அவகாசமும் வழங்கப்பட வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுத் தொடர்பு

நீதிபதி திமோதி கெல்லியின் முந்தைய வரலாற்றுத் தீர்ப்பின் தொடர்பு

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி திமோதி கெல்லி, 2018இல் டிரம்பின் முந்தைய அதிபர் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது சிஎன்என் நிருபர் ஜிம் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை நுழைவு உரிமத்தை டிரம்ப் ரத்து செய்தபோது, அதை உடனடியாகத் திரும்ப வழங்குமாறு நீதிபதி கெல்லி உத்தரவிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் அதேபோன்ற சட்ட நடைமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி கெல்லி, பழைய நீதிமன்றத் தீர்ப்புகளின் முன்னுதாரணங்களின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகையின் வாதமும் பத்திரிகையாளர் அமைப்புகளின் ஆதரவும்

நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "வெள்ளை மாளிகை அனுமதி என்பது ஒரு சிறப்புரிமையே தவிர உரிமையல்ல.

தேசியப் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே இத்தடை விதிக்கப்பட்டது." என வாதிட்டனர்.

இருப்பினும், அரசின் கருத்துகளுக்கு எதிராக செய்தி வெளியிடுவதற்காக ஊடகங்களின் உரிமத்தைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனப் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

தற்சமயம் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவின் மூலம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இம்மூன்று ஊடகங்களும் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு சென்று செய்த சேகரிக்க முடியும்.

ADVERTISEMENT