Loading...
விலை வெறும் $100 தான்! நிலநடுக்கத்தை நொடியில் கணித்து எச்சரிக்கும் கியூப்; 16 வயது மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
நிலநடுக்கத்தை நொடியில் கணித்து எச்சரிக்கும் கியூப் கருவியை உருவாக்கினார் 16 வயது அமெரிக்க பள்ளி மாணவி

விலை வெறும் $100 தான்! நிலநடுக்கத்தை நொடியில் கணித்து எச்சரிக்கும் கியூப்; 16 வயது மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த விவியன் ஹி என்ற 16 வயது பள்ளி மாணவி, நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கியூப் என்ற சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளார். ரூபிக்ஸ் கியூப் அளவிலேயே இருக்கும் இக்கருவியை உருவாக்க $100-க்கும் குறைவான (சுமார் ₹8,300) தொகையே செலவாகிறது. விலையுயர்ந்த அதிநவீன கண்காணிப்பு அமைப்புகள் இல்லாத பகுதிகளிலும் நிலநடுக்க எச்சரிக்கையை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

கியூப் கருவி இயங்கும் தொழில்நுட்பம்

இக்கருவியில் ஜியோஃபோன் என்ற சிறப்பு சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இது பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வுகளை உடனுக்குடன் கண்டறிந்து, அதன் வன்பொருள் மற்றும் மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்கிறது.

நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கண்டறிந்தவுடன், வைஃபை உதவியுடன் அதிக சத்தத்துடன் சைரன் ஒலியை எழுப்புவதுடன், இச்சேவையில் இணைந்துள்ள பயனர்களின் செல்போன்களுக்கு தானாகவே எச்சரிக்கைக் குறுஞ்செய்திகளையும் அனுப்புகிறது.

துல்லியமான முடிவுகள்

லாஸ் ஏஞ்சலஸ் சோதனையில் கிடைத்த துல்லியமான முடிவுகள்

விவியன் ஹி தனது கியூப் கருவியை லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 2020 செப்டம்பர் முதல் 2021 மே வரை 9 மாதங்கள் தொடர் சோதனைக்கு உட்படுத்தினார்.

அப்போது ரிக்டர் அளவில் 3.0-க்கு மேல் பதிவான நிலநடுக்கங்களையும், 2.3 என்ற அளவில் பதிவான சிறிய அதிர்வுகளையும் இக்கருவி துல்லியமாகக் கணித்தது.

குறிப்பாக 2020 செப்டம்பர் 19 அன்று பதிவான 4.5 ரிக்டர் நிலநடுக்கத்தின் போது, அரசு அமைப்புகளின் பெரிய நிலநடுக்கமானிகளுக்கு நிகரான தரவுகளை இச்சிறிய சாதனம் பதிவு செய்து அசத்தியது.

ADVERTISEMENT

நிலநடுக்க எச்சரிக்கை

எதிர்கால பயன்பாடும் நிலநடுக்க எச்சரிக்கை வணிகமும்

நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பே அதை முன்கணிப்பது சாத்தியமில்லை என்றாலும், முதன்மை அதிர்வலைகள் (P-waves) தாக்கும் போதே இக்கருவி கண்டறிந்து விடுவதால், கடுமையான இரண்டாம் கட்ட அதிர்வுகள் (S-waves) வருவதற்குள் மக்கள் தப்பிக்க சில வினாடிகள் கால அவகாசம் கிடைக்கிறது.

இத்தகைய குறைந்த விலை கருவிகள் மூலம் வீடுகள் மற்றும் கிராமப்புறங்களில் நிலநடுக்க எச்சரிக்கை நெட்வொர்க்கை விரிவுபடுத்த முடியும் என்றாலும், வெவ்வேறு நிலப்பரப்புகளில் இதன் செயல்பாட்டை மேலும் சோதிக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT